மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் கீழ் வரும் பள்ளிகளில் பணிபுரிய மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைவது கட்டாயமாகும். நாடு முழுவதும் 110 நகரங்களில் இந்தத் தேர்வு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு! - மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு
டெல்லி: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
CBSE
இந்த தேர்வில் கலந்து கொள்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் வழங்கப்பட்டுவருகிறது. இதற்கான கடைசி தேதி செப்டம்பர் 18ஆம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் ஜூலை 30ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், 3.52 லட்சம் பேர் தேர்ச்சி அடைந்தனர். இந்தத் தேர்வின் கால அளவு ஏழு ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.