மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) இணைந்து 350 சிசி கொண்ட ராயல் என்பீல்டு பைக்கில் மினி ஆம்புலன்ஸ் வசதியை உருவாக்கியுள்ளனர். இதனை சிஆர்பிஎஃப் தலைமை அலுவலகத்தில் சிஆர்பிஎஃப் இயக்குநர் ஜெனரல் ஏ.பி.மகேஸ்வரி, டிஆர்டிஓ இயக்குநர் ஜெனரல் ஏ.கே.சிங் இந்த பைக் ஆம்புலன்ஸ் பாதுகாப்பு அவசரகால தேவைகளில் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ராணுவ உயர் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சிஆர்பிஎப் அலுவலர் ஒருவர் கூறுகையில், பதற்றமான பகுதிகளில் குறிப்பாக மாவோயிஸ்டு, நக்சல்கள் நடமாட்டம் மிக்க பகுதிகளில் துப்பாக்கிச் சண்டைகளின்போது மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் குறுகிய பாதைகளில் வேகமாக செல்ல வேண்டிய அவசியத்தை பலமுறை சிஆர்பிஎப் உணர்ந்துள்ளது. மருத்துவ வசதிகள் சரியான நேரத்தில் அடைய முடியாத நிகழ்வுகளும், மருத்துவ உதவிகளில் தாமதம் ஏற்பட்டதும் நோயாளிகளின் நிலைமையை மிகவும் சிக்கலானதாக ஆக்கியுள்ளன. அதன் விளைவாக இந்த பைக் ஆம்புலன்ஸ் 'ரக்ஷிதா' உருவாக்கப்பட்டுள்ளது.