தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதற்கான தேசிய மையத்தை (NCDE) மத்திய ரிசர்வ் காவல் படை ஏற்படுத்தியுள்ளது. தங்களது கடமையைச் செய்யும்போது கடும் காயமடைந்து மாற்றுத்திறனாளிகளாக மாறிய மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதே இந்த மையத்தின் முதன்மையான நோக்கம்.
வீரர்களுக்கு வெவ்வேறு விளையாட்டுகளில் பயிற்சி அளிப்பதற்கான அனைத்து நவீன வசதிகளையும் இந்த மையம் கொண்டுள்ளது. வரும் டிசம்பர் 10ஆம் தேதி இந்த மையத்தின் சேவை தொடங்கப்படும்.