டெல்லி லோதி சாலையில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை (சிஆர்பிஎஃப்) தலைமையகம் அமைந்துள்ளது. இங்கு ஊழியர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அலுவலர்கள், சிஆர்பிஎஃப் தலைமையகத்தை மூடி நடவடிக்கை எடுத்தனர்.
கரோனா பாதிப்புக்குள்ளானவர், சிறப்பு பொது இயக்குனரின் தனிப்பட்ட செயலாளராக பணிபுரிந்தவர் ஆவார். இதையடுத்து சிறப்பு பொது இயக்குனர் மற்றும் இதர ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.