டெல்லி செங்கோட்டை அருகே கடந்த வாரம் உயிரிழந்த நிலையில் 91 காகங்களும், 27 வாத்துகளும் கண்டறியப்பட்டன. இதில் 15 காகங்களின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்தில் சோதனை செய்ததில், அவற்றிற்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கோட்டை பகுதியில் உயிரிழந்த காகங்களுக்கு பறவைக் காய்ச்சல் உறுதி - செங்கோட்டை பகுதியில் உயிரிழந்த காகங்களுக்கு பறவைக் காய்ச்சல்
டெல்லி: செங்கொட்டைப் பகுதியில் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்ட காகங்களுக்கு, பறவைக் காய்ச்சல் இருந்தது ஆய்வக சோதனையில் தெரிய வந்துள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது.
காகங்கள்
இது தொடர்பாக கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’உயிரிழந்த 15 காகங்களின் மாதிரிகள் ஜலந்தர் மற்றும் போபால் ஆய்வகங்களுக்கு சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன. அனைத்து காகங்களின் மாதிரிகளிலும் பறவைக்காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டது. வாத்துகளின் மாதிரிகளிலும் பறவைக் காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 1000 பறவைகள் உயிரிழப்பு!