கர்நாடகா மாநிலத்தில், தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக, பெலகாவி மாவட்டம், கோகாக் தாலுகாவில் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
எனக்கு ஓய்வெடுக்க இடம் கிடைச்சுட்டு... முதலை நிம்மதி பெருமூச்சு..! - முதலை
பெங்களுரு: கர்நாடகாவில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீட்டின் மேற்கூரையில் முதலை ஒன்று ஆசுவாசமாக ஓய்வெடுக்கும் காணொலி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
முதலை
இந்நிலையில் அங்குள்ள ஒரு கிராமத்தில் ஓரளவு நீரில் மூழ்கிய வீட்டின் மேற்கூரையில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட 10 அடி நீளமுள்ள முதலை ஒன்று படுத்து ஓய்வெடுத்து கொண்டிருக்கும் காட்சியை பார்த்த அப்பகுதி மக்கள் செல்போனில் படம் பிடித்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த காணொலி தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.