இதுதொடர்பாக ஆளுநர் கிரண்பேடி முதலமைச்சர் நாராயணசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,
'ஆளுநரான என்னையும், அரசியலமைப்பு அலுவலகமாக உள்ள ஆளுநர் மாளிகை மீதும் கடந்த சில நாட்களாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி, தரக்குறைவாக பேசுகிறீர்கள். கடந்த சில நாட்களாக எல்லைமீறி கண்ணியத்தை இழந்து பேசி வருகின்றீர்.
புத்தர் கூறியதை நினைவில் கொள்ளுங்கள், குற்றச்சாட்டுகளை கூறும்போது அதை ஒருவர் ஏற்க மறுத்தார் எனில் அது குற்றம்சாட்டுபவரைத்தான் சேரும். உங்கள் முதலமைச்சர் அலுவலத்துக்கான கண்ணியத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஆளுநர் மாளிகையை தாங்கள் மோசமாக பேசுவதை மக்கள் ஏற்கவில்லை. அத்தகைய மோசமான நடத்தையிலிருந்து நீங்கள் விலகுவீர்கள் என்று நம்புகிறேன்.
துணைநிலை ஆளுநர் அலுவலகம் முற்றிலும் புதுச்சேரிக்கும், அதன் மக்களுக்கும் என்ன தேவை என்பதை உணர்ந்து செயல்படுகிறது. கருத்து வேறுபாடுகளைக் கூற கண்ணியமான இடம் உள்ளது என்பதை தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தர விரும்புகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரியில் கேசினோ சூதாட்டத்தை கொண்டுவருவதில் முதலமைச்சர் நாராயாணசாமி முனைப்போடு உள்ளார். இதற்கு கிரண்பேடி கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார். இந்த விவகாரம் மட்டுமல்லாமல் இன்னும் பல விவகாரங்களில் இவர்களுக்கு இடையே நிலவும் கருத்து மோதல்கள், புதுச்சேரி அரசியல் வட்டாரங்களில் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்துகிறது.
இதையும் படியுங்க:
என்னைப் பார்த்தா பேய் மாதிரி இருக்கா? - கிரண்பேடி ஆவேசம்