பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ (Inter-Services Intelligence) அமைப்பிடம் இருந்து பாஜகவும், பஜ்ரங் தல் அமைப்பும் நிதியுதவி பெறுவதாக மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான திக்விஜய சிங் சமீபத்தில் கூறியிருந்தார்.
பாஜகவுக்கு எதிராக கருத்து: காங். முன்னாள் முதலமைச்சர் மீது கிரிமினல் வழக்கு! - திக்விஜய சிங்
போபால்: பாகிஸ்தானின் உளவு அமைப்பிடம் இருந்து பாஜகவும், பஜ்ரங் தல் அமைப்பும் நிதியுதவி பெறுவதாகக் கூறிய திக்விஜய சிங் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Digvijaya Singh
இவரின் கருத்து பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில், அவரின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்காக அவர் மீது கிரிமினல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீது விசாரணை வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.