மார்ச் மாதத்தில் டெல்லியில் நடந்த சமய மாநாட்டில் ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இவர்களில் பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நாள்களுக்கு முன்னால் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 30 சதவிகிதம் பேருக்கு டெல்லி மாநாட்டில் தொடர்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதனிடையே அந்தச் சமய மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் மவுலானா சாத் மீது டெல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அந்த நேரத்தில் மவுலானா வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இவரது தனிமைப்படுத்தப்பட்ட காலம் ஏப்ரல் 14ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில், காவல் துறையினர் விசாரணைக்கு வரவில்லை.