கரோனா வைரஸ் பாதிப்பால் தாயகம் திரும்ப முடியாமல் பல்வேறு நாடுகளிலும் சிக்கித்தவித்த இந்தியர்களை மீட்க, மத்திய அரசு சார்பாக விமானம் அனுப்பப்பட்டு அழைத்து வரப்பட்டனர்.
அந்த விமானத்தில் விமான ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் தரமற்ற நிலையில் இருந்ததாக ஏர் இந்தியா விமான ஓட்டுநர் சங்கம் சார்பாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், ''மீட்பு விமானங்களில் விமான அலுவலர்களுக்கும், விமான ஓட்டுநர்களுக்கும் கொடுக்கப்படும் மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்கள் தரமற்றதாக உள்ளது. கிருமி நாசினிகள் போதுமான அளவிற்கு வழங்கப்படுவதில்லை'' எனக் கூறப்பட்டுள்ளது.
அதே கடிதத்தில் ஏர் இந்தியா நிர்வாக இயக்குநர் கூறுகையில், '' மீட்பு பணிகளின்போது எங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் முக்கிய நேரங்களில் கிழிந்துவிடுகின்றன'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஜப்பான் சொகுசுக் கப்பல்: 119 இந்தியர்களுடன் டெல்லி வந்திறங்கியது மீட்பு விமானம்