தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 22, 2020, 2:02 AM IST

ETV Bharat / bharat

ட்ரம்பின் வருகைக்கு எதிராக கருப்புக் கொடி- சிபிஐ

டெல்லி : அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்புக் கொடி காட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது.

K. Narayana, National Secretary of CPI
சிபிஐ தேசிய செயலாளர் கே.நாராயணா பேட்டி

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் வரும் பிப்ரவரி 24, 25ஆம் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். குறிப்பாக குஜராத்தில் அகமதாபாத், ஆக்ரா, டெல்லி ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேலும், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் "வணக்கம் ட்ரம்ப்" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

இந்தியாவெங்கும் பலர் ட்ரம்பின் வருகையை ஆதரித்து பரிசுப்பொருட்களையும், பதாகைகளையும் தயார் செய்யும் நேரத்தில், சிபிஐ கட்சிக்காரர்கள் இவ்வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த வருகையை விமர்சிக்கிறார்கள்.

சிபிஐ தேசிய செயலாளர் கே.நாராயணா பேட்டி

இதுகுறித்து, சிபிஜயின் தேசிய செயலாளர் கே.நாராயணா கூறுகையில், ட்ரம்பின் வருகை நாட்டிற்கு நன்மையானதல்ல. அதனால்தான் நாங்கள் அவரை இங்கு அனுமதிக்க விரும்பவில்லை. அவர் வருகைதரும் இடங்களான அகமதாபாத், டெல்லி, ஆக்ரா போன்ற இடங்களில் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளோம்.

இந்தியாவிற்கு ஆயுதங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை விற்பனை செய்வதன் மூலமாக அமெரிக்கா செழிக்கிறது. அதே நேரத்தில் இந்தியாவிலிருந்து தனது நாட்டிற்கு இறக்குமதியைக் குறைக்கிறது. இப்படியாக அமெரிக்கா இந்தியாவை அழிவுக்குத் தள்ளுகிறது. இனி வரவிருக்கும் அமெரிக்கத் தேர்தல்களை மனதில் வைத்து ட்ரம்ப் இது போன்ற பயணங்களை மேற்கொள்கிறார். அமெரிக்காவிலிருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வாக்காளர்களை திருப்திப்படுத்தவே இவையெல்லாம் அரங்கேறுகிறது.

கர்நாடகாவின் குல்பர்காவில் நடந்த சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியில் பேசிய மகாராஷ்டிரா எம்.எல்.ஏ, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவர் வாரீஸ் பதான், “நூறு கோடிக்கும் அதிகமாக இருப்பவர்களைவிட 15 கோடி முஸ்லீம்களின் சக்தி பெரியது,” என்று கூறியதை நாங்கள் முற்றிலுமாக கண்டிக்கிறோம். அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி வேண்டுமென்றே மக்களைத் தூண்டிவிடுகிறது. இத்தகைய அறிக்கைகள் ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் எதிரானது, என்றார்.

இதையும் படிங்க: 'நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு, ட்ரம்புக்கு ஆதரவு'- இது காலிஸ்தான் அரசியல்

ABOUT THE AUTHOR

...view details