மாநிலங்களவைக்கு வருகிற 26ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் கூட்டு வேட்பாளராக பிகாஷ் பட்டாச்சார்யா நிறுத்தப்பட்டுள்ளார்.
முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, டெலிபோனில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியைத் தொடர்புகொண்டு இதற்கு ஒப்புதல் பெற்றார்.
கடந்தாண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பிகாஷ் பட்டாச்சார்யா ஜாதவ்பூர் தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.
பிகாஷ் பட்டாச்சார்யா 2005-2010 காலகட்டங்களில் கொல்கத்தா நகர மேயராக இருந்துள்ளார். இரு ஆண்டுகளுக்கு முன்பு இவர் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகின.
ஆனால் கடைசி நேரத்தில் பிகாஷ் பட்டாச்சார்யா வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மேற்கு வங்கத்திலிருந்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அர்பிதா கோஸ், முன்னாள் மத்திய அமைச்சர் தினேஷ் திரிவேதி, முன்னாள் எம்.பி. மௌசம் நூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதையும் படிங்க :ம.பி. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூர் பயணம்