தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கூகுள், வாட்ஸ்அப், அமேசானுக்கு எதிராக சிபிஐ எம்பி வழக்கு - UPI Guidelines Violation

சீன அப்ளிகேசன்கள் தடை செய்யப்பட்டுவிட்டது என்றால், யுபிஐ (UPI) விதிமுறைகளை மீறி அப்ளிகேசன்களுக்கு பணப்பரிமாற்ற உரிமையை எப்படி ரிசர்வ் வங்கி அளித்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.

Google, Amazon, WhatsApp UPI platforms
Google, Amazon, WhatsApp UPI platforms

By

Published : Sep 11, 2020, 2:33 AM IST

டெல்லி: சிபிஐ மாநிலங்களவை உறுப்பினர் பினோய் விஸ்வம், கூகுள் பே, அமேசான் பே மற்றும் வாட்ஸ்அப் பேவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர், சீன அப்ளிகேசன்கள் தடை செய்யப்பட்டுவிட்டது என்றால், யுபிஐ (UPI) விதிமுறைகளை மீறி அப்ளிகேசன்களுக்கு பணப்பரிமாற்ற உரிமையை எப்படி ரிசர்வ் வங்கி அளித்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், இந்த நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும். வாட்ஸ்அப் பே அறிமுகமாவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோல் பிற அப்ளிகேசன்கள் தங்கள் தாய் நிறுவனத்துடன் வாடிக்கையாளர்களின் தகவல்களை பகிர்வதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிடில் இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்றார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டிஎன் படேல், பிரதீக் ஜலான் அடங்கிய அமர்வு, செப்டம்பர் 24ஆம் இதுதொடர்பாக விசாரிக்கப்படும் என உத்தரவிட்டது.

ABOUT THE AUTHOR

...view details