திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகி அசோக் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார். இக்கொலைக்கு காரணமான குற்றவாளிகளை விரைவாக கைது செய்யவேண்டும்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி கொலை: சிபிஐஎம் ஆர்ப்பாட்டம்! - தச்சநல்லூர்
புதுச்சேரி: இந்திய ஜனநாயக சங்க நிர்வாகியின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிபிஐஎம்
அதேபோல் அவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகி அசோக் படுகொலையைக் கண்டித்து முழக்கமிடப்பட்டது.