தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

12 வருடங்களுக்கு பிறகு சிபிஐ(எம்) கட்சி அலுவலகம் திறப்பு! - நாண்டிகிராம் தாக்குதல்

கொல்கத்தா: 12 வருடங்களுக்கு பிறகு மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

CPI-M office reopens in Nandigram after 12 years

By

Published : Apr 8, 2019, 10:45 AM IST

கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், டாடா கார் நிறுவனத்திற்கு விவசாய நிலங்களை கைப்பற்றி கொடுத்ததற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதில் மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் இருந்த சிபிஐ(எம்) கட்சி அலுவலகம் போராட்டக்காரர்களால் இடிக்கப்பட்டது. அப்போது அதில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் பலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த நந்திகிராம் தாக்குதல் நடந்து 12 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், நேற்று அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் திறக்கப்பட்டது.

இதுகுறித்து சிபிஐ(எம்) கட்சி தலைவர் ராபீன் தேப் கூறுகையில், ‘மேற்கு வங்கத்தில் மீண்டும் செங்கொடி பறக்க போகிறது என்பதற்கான அறிகுறி இது’ என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details