தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐஎம் வழக்கு - ஓபிசி இட ஒதுக்கீடு

டெல்லி: மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தொடுத்துள்ளது.

SUPREME COURT CPI(M) TAMIL NADU OBC RESERVATION மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஓபிசி இட ஒதுக்கீடு cpim obc reservation
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஓபிசி இட ஒதுக்கீடு

By

Published : Jun 2, 2020, 10:59 PM IST

இளங்கலை, முதுகலை மருத்துவப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 27 விழுக்காடு தேசிய அளவிலான இட ஒதுக்கீட்டை அரசு கல்லூரிகளில் அமல்படுத்த அரசுக்கு உத்தரவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தொடுத்துள்ளது.

அந்த மனுவில், "மத்திய அரசுப் பணிகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இந்திய அரசு வழங்கியது. பின்னர், உச்ச நீதிமன்றம் அதனை உறுதிசெய்தது.

ஆனால், 2017-18, 2018-19, 2019-20 ஆகிய கல்வியாண்டுகளில் இந்த இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. 2018-19 கல்வியாண்டில், மொத்தமுள்ள 7,982 இடங்களில் 2,152 பேருக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 220 பேர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர்.

அதேபோல், இளங்கலை மருத்துவப் படிப்பில் தேசிய அளவிலான இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 66 பேர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். இளங்களை மருத்துவப் படிப்பை பொறுத்தவரை தேசிய அளவில் 4,061 இடங்கள் உள்ளன.

27 விழுக்காடு என்றால் 1,096 பேருக்கு இடங்கள் ஒதுக்கியிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறதா என்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக தேசிய அளவிலான இட ஒதுக்கீட்டைச் சரியாக அமல்படுத்த வேண்டும் என பிற்படுத்தப்பட்ட மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக திமுக செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குத் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details