தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’நீதிபதிகளின் ஓய்விற்குப் பிறகு பதவிகளில் அமர்த்துவதைத் தடுக்கச் சட்டம்...!’

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் நீதிபதிகளின் ஓய்விற்குப் பிறகு அவர்களை வேறு பதவிகளில் அமர்த்துவதைத் தடுக்க ஒரு சட்டத்தை கொண்டுவர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா கோரிக்கைவிடுத்துள்ளார்.

By

Published : Mar 18, 2020, 9:39 AM IST

CPI demands
CPI demands

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாயை மாநிலங்களவை உறுப்பினராகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அண்மையில் நியமித்திருந்தார். தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி 12 மாநிலங்களவை உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமிக்க முடியும்.

உச்ச நீதிமன்றத்தின் 46ஆவது தலைமை நீதிபதியாக 13 மாதங்கள் பதவிவகித்த ரஞ்சன் கோகாய், அயோத்தி உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து விலகிய பிறகு, அவரை மாநிலங்களவை உறுப்பினராகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேர்வுசெய்தார். பணியிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், அடுத்த நான்கு மாதத்திற்குள் ரஞ்சன் கோகாய்-க்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்தது பல தரப்பிலும் விவாதத்தைக் கிளப்பியது.

டி. ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர்

இதனிடையே, ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினர் பதவி நியமனம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா கூறுகையில், ”உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் நீதிபதிகள் ஓய்விற்குப் பின்னர் இதுபோன்று பதவிகளில் அமர்த்துவதைத்தடைசெய்ய ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும்.

ரஞ்சன் கோகாயை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்திருப்பதன் மூலம் நீதித் துறையின் சுதந்திரம், அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுகின்றன" என்றார்.

இதையும் படிங்க:அயோத்தி வழக்குக்கு கைமாறாக ரஞ்சன் கோகோயிக்கு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி?

ABOUT THE AUTHOR

...view details