ஆந்திர மாநிலம், சித்தூர், சந்தமப்பள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயி ராம் பாபு, தனது பசுவை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்ட வெடிகுண்டு பழத்தை சாப்பிட்ட மாடு உயிரிழப்பு! - காட்டுப்பன்றிக்கு வைத்த வெடிகுண்டு பழத்தை சாப்பிட்ட மாடு
அமராவதி : வனப்பகுதியில் காட்டுப்பன்றிக்காக வேட்டைக்காரர்கள் வைத்திருந்த கைகுண்டு அடங்கிய பழத்தை தவறுதலாக உண்ட மாடு ஒன்று, பலத்த காயமடைந்து உயிரிழந்தது.
அப்போது, காட்டுப்பன்றிக்காக வேட்டைக்காரர்கள் வைத்திருந்த கைகுண்டு அடங்கிய பழத்தை தவறுதலாக அந்த மாடு சாப்பிட முயற்சித்துள்ளது. இந்நிலையில், பழத்தை மாடு மெல்ல மென்று சாப்பிடத் தொடங்கியதும் குண்டு வெடித்து, பலத்த காயமடைந்துள்ளது. தொடர்ந்து, விரைந்து வந்த அருகிலிருந்த கால்நடை மருத்துவர், மாட்டிற்கு சிகிச்சையளிக்க முயற்சித்துள்ளார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி மாடு பரிதாபமாக உயிரிழந்தது.
இந்நிலையில், காட்டுப்பன்றிகளுக்கு வைக்கப்படும் வெடிகுண்டுகளை உண்டு பல்வேறு உயிரினங்களும் இவ்வாறு தொடர்ந்து உயிரிழந்து வருவதால், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.