இந்தியா - வங்கதேச எல்லையில், பசுக்கள் உள்ளிட்ட பல்வேறு கால்நடைகள் கடத்தப்படுவது வாடிக்கையாகியுள்ளது. முறையான அனுமதி இல்லாமல், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் கால்நடைகள் கடத்தப்படுவதால், அவை பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகிறது. தோலுக்காகவும், இறைச்சிக்காகவும், எலும்புகளுக்காகவும் கால்நடைகள் இதுபோல், முறைகேடாக நடத்தப்படுகிறது.
இரு நாடுகளின் எல்லைப் பகுதியில், பாதுகாப்பு படையினால் கைப்பற்றப்பட்ட பசுக்கள், தயான் என்ற அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படுகிறது. கைவிடப்பட்ட காயமைடந்த பசுக்களை, இந்த அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பராமரித்துவருகின்றனர். இதுபோல் இந்தியா முழுக்க 32 அமைப்புகள் தயான் அறக்கட்டளையின் கீழ் இயங்குகிறது.