பெங்களூரு (கர்நாடகம்): பசுவதை தடுப்பு சட்டம் மாநிலம் முழுவதிலும் ஜனவரி 18ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
கர்நாடகத்தில் அமலுக்கு வரும் பசுவதை தடுப்பு சட்டம்! - Minister Prabhu Chouhan
கர்நாடக மாநிலத்தில் ஜனவரி 18ஆம் தேதி முதல் பசுவதைத் தடுப்பு சட்டம் அமலுக்கு வரும் என அமைச்சர் பிரபு சவுகான் தெரிவித்துள்ளார்.
![கர்நாடகத்தில் அமலுக்கு வரும் பசுவதை தடுப்பு சட்டம்! Karnataka Cow Slaughter Prohibition Act, Cow slaughter bill Karnataka, Karnataka Cow Slaughter Prohibition Act news, Cow slaughter Karnataka News, Cow Slaughter Prohibition act, பசுவதை தடுப்புச் சட்டம், அமைச்சர் பிரபு சவுகான், Minister Prabhu Chouhan, கர்நாடகம் பசுவதை தடுப்புச் சட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10274588-thumbnail-3x2-cow-slaughter-prohibition-act.jpg)
Karnataka Cow Slaughter Prohibition Act
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே கர்நாடக சட்டப்பேரவையில் பசுவதை தடுப்பு மசோதா டிசம்பர் 2020இல் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
இந்த புதிய சட்டம் அமலுக்கு வரும் வேளையில், மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜனவரி 18ஆம் தேதி முதல் இச்சட்டம் மாநிலம் முழுவதிலும் முழுவீச்சில் அமல்படுத்தப்படுமென அமைச்சர் பிரபு சவுகான் தெரிவித்துள்ளார்.