கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் மைக்கேல் லோபோ, "கலங்குட் பகுதியில் அனாதையாக விடப்பட்டிருந்த 76 மாடுகள் மீட்கப்பட்டு கோசாலைக்குக் கொண்டு வரப்பட்டது. அந்த மாடுகள் சைவத்துக்குப் பதிலாக அசைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுகிறது" என்று தெரிவித்தார்.
இவை சாலைகளில் அனாதையாகத் திரிந்துகொண்டிருந்தபோது சாலைகளில் கொட்டப்படும் சிக்கனையும் மீன் வறுவல்களையும் உண்டு பழக்கப்பட்டுள்ளது. மேலும் புல் உட்பட அனைத்து சைவ உணவுகளையும் சாப்பிட இந்த மாடுகள் மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.