தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

2021இல் கரோனா தடுப்பூசி: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை - தேசிய நிபுணர் குழு

டெல்லி: கரோனா வைரஸ் தடுப்பூசி 2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தயாராக இருக்கக்கூடும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

'Elderly and high-risk groups to get Covid vaccine first'
'Elderly and high-risk groups to get Covid vaccine first'

By

Published : Sep 13, 2020, 9:27 PM IST

'சண்டே சம்வத்' நிகழ்ச்சியின்போது தனது சமூக வலைதளத்தை பின்பற்றுபவர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதிலளித்தார். அப்போது பேசிய அமைச்சர், “மூத்த குடிமக்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள அமைப்புகளில் பணிபுரியும் மக்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்குவதற்கான அவசர அங்கீகாரத்தை வழங்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக ஒருமித்த முடிவு எட்டப்பட்ட பின்னர் இது நடைமுறைப்படுத்தப்படும்.

கரோனா தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழு, பெரும்பான்மையான மக்களை எவ்வாறு தடுப்பூசி போடுவது என்பது குறித்த விரிவான மூலோபாயத்தை உருவாக்கிவருகிறது. தடுப்பூசியின் மனித சோதனைகளை நடத்துவதில் அரசாங்கம் முழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

தடுப்பூசி பாதுகாப்பு, செலவு, உற்பத்தி காலக்கெடு போன்றவை போன்ற விஷயங்களும் தீவிரமாக விவாதிக்கப்படுகின்றன. பணம் செலுத்தும் திறனைப் பொருட்படுத்தாமல், தடுப்பூசி மிகவும் தேவைப்படுபவர்களுக்கு முதலில் கிடைக்கும் என்று உறுதியளிக்கிறேன்.

உயிர் தொழில்நுட்பத் துறை (டிபிடி), மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்(ஐசிஎம்ஆர்) ஆகியவை தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்பவர்களின் பாதுகாப்பிற்காக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இயற்கையான தொற்றுநோயுடன் ஒப்பிடும்போது கரோனா நோய் எதிர்ப்பு சக்தியை மிக விரைவான வேகத்தில் நிறுவுவதற்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி உதவும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details