தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உத்தரப் பிரதேசத்தில் கரோனா விஸ்வரூபம், பாஜக அரசு மீது பிரியங்கா குற்றச்சாட்டு! - உபியில் விஸ்வரூபம் எடுத்துள்ள கரோனா

டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் கரோனா பரிசோதனை செய்வது குறைவாக இருப்பதால், வைரஸ் தொற்று விஸ்வரூபம் எடுத்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

உபியில் விஸ்வரூபம் எடுத்துள்ள கரோனா -பாஜக அரசை குற்றச்சாட்டும் பிரியங்கா காந்தி!
உபியில் விஸ்வரூபம் எடுத்துள்ள கரோனா -பாஜக அரசை குற்றச்சாட்டும் பிரியங்கா காந்தி!

By

Published : Jul 18, 2020, 9:27 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

இருந்தபோதிலும் இந்தியாவில் பத்து லட்சத்து 38 ஆயிரத்து 716 பேர் பாதித்தும், 26ஆயிரத்து 273 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இதில் உத்தரப் பிரதேசத்தில் 45 ஆயிரத்து 363 பேர் பாதித்தும், ஆயிரத்து 84 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசை அம்மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதோரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதில், “உத்தரப் பிரதேசத்தில் ஆளும் அரசு கரோனாவை கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு பரப்புரையில் ஈடுபட்டுவருகிறது.

மேலும், கரோனா வைரஸ் பரிசோதனை செய்வதிலும், கரோனா பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதிலும் ஆளும் அரசு தோற்றுள்ளது. இதனால், மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக மூன்று மாதங்கள் ஊரடங்கு அமலில் இருந்தும், மாநிலத்தில் உள்ள 25 மாவட்டங்களில் கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. பிரயாக்ராஜ் மாவட்டத்தில் பரிசோதனை செய்யப்பட்டு உறுதியாகி 48 மணி நேரத்தில் 70 விழுக்காடு மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து முதலமைச்சருக்கு பல முறை ஆலோசனை வழங்கி கடிதம் எழுதியுள்ளோம். ஆனாலும் அரசு சார்பில் இதுவரை எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க...ஒப்பந்தங்களின் அடிப்படையில் சர்வேத விமான போக்குவரத்து!

ABOUT THE AUTHOR

...view details