கரோனா வைரஸ் பரவலுக்கு இடையே முதல்முறையாக நாடாளுமன்றம் கூடவுள்ளது. இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கு முன்னதாக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மழைக்காலக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக, அதாவது செப்.11ஆம் தேதி பிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும். அப்படி செய்ய தவறினால், நாடாளுமன்றத்தின் முகவறையிலேயே அவருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்படும். அதுவரையிலும் அவர் கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாது.
அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் யாருக்கேனும் கரோனா பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்தாலும், அவருக்கு கரோனா அறிகுறி இருந்தால் பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும். அதுவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் ஆலோசனை வழங்கப்படும்.