ஷார்ஜாவிலிருந்து கேரளா திரும்பிய கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையால் அவர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தார்.
இந்நிலையில், இவர் பரியரம் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
இதுகுறித்து மருத்துவமனை மருத்துவர் அஜின் கூறுகையில், ”எங்களது மருத்துவர்கள் குழு அவருக்கு சி பிரிவு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டது. கரோனா தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட 14ஆவது சி பிரிவு சிகிச்சை இது.
அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு தாயும்சேயும் நலமாக இருக்கின்றனர். இதுவரை 50 கர்ப்பிணிகள் கண்ணூரில் உள்ள பரியாரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ உதவி கோரியிருந்தனர்.
மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்து, கேரள மருத்துவமனைகளிலும், பரியாரம் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்ற கர்ப்பிணிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது” என்றார்.