தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவால் தாமதமாகும் புல்லட் ரயில் திட்டம்? - தேசிய அதிவிரைவு ரயில் கழகம்

கோவிட்-19 பொதுமுடக்கம் தாக்கத்தால் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் நிறைவடைவதில் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bullet
Bullet

By

Published : Sep 5, 2020, 3:42 PM IST

கரோனா பெருந்தொற்று தாக்கத்தின் காரணமாக புல்லட் ரயில் திட்டம் 2023 ஆண்டுக்குள் முடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக தேசிய அதிவிரைவு ரயில் கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் மூத்த அலுவலர் தெரிவித்த கருத்தின்படி, திட்டத்திற்காக நிலக் கையகப்படுத்தும் பணிகள் தற்போது ஓரளவு நிறைவடைந்துவிட்டன. திட்டத்திற்காக 63 விழுக்காடு நிலங்கள் இதுவரை தயாராகவுள்ளன.

கரோனா பாதிப்பு காரணமாக ஒன்பது ஒப்பந்தங்கள் தற்போது தாமதமாகியுள்ளன. நிலைமை எப்போது சீராகும் என்பதை கணிக்கமுடியாததால், 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் திட்டப்பணிகளை முடிப்பது சந்தேகம் எனத் தெரிவித்துள்ளார்.

புல்லட் ரயில் திட்டத்தின் மொத்த மதிப்பு 1.08 லட்சம் கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசு 10 ஆயிரம் கோடி தொகையும், திட்டத்தில் பங்கேற்றுள்ள குஜராத் மற்றும் மகாராஷ்டிரா அரசுகள் தலா 5 ஆயிரம் கோடி ரூபாயும், ஜப்பான் அரசு 0.1 விழுக்காடு வட்டி விகிதம் மீதத் தொகையும் தரவுள்ளன.

திட்டம் தாமதாகும் என்பதால், மொத்த மதிப்பீடுத் தொகை ரூ.1.08 லட்சம் கோடி ரூபாயிலிருந்து ரூ.1.70 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:2019இல் 24,000 பேர் ரயில் சார்ந்த விபத்துகளில் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details