தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கரோனா' - பிறந்த இரட்டைக் குழந்தைகளின் நிலை என்ன?

ஹைதராபாத்: தெலங்கானாவில் கரோனா பாதித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு காந்தி மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.

ஹைதராபாத்
ஹைதராபாத்

By

Published : May 27, 2020, 8:14 PM IST

Updated : May 27, 2020, 9:12 PM IST

தெலங்கானா மாநிலம், மேட்சல் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு, பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இவரை உடனடியாக அருகிலிருக்கும் நிலோஃபர் மருத்துவமனைக்கு (Niloufer Hospital) குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். கர்ப்பிணியைப் பரிசோதித்த மருத்துவர், கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து அப்பெண் வந்ததால், கரோனா பரிசோதனையும் மேற்கொண்டனர். அதில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அப்பகுதியில் கரோனா சிகிச்சையளிக்கும் காந்தி மருத்துவனையில் கர்ப்பிணியை அவரது குடும்பத்தினர் அனுமதித்தனர்.

இந்நிலையில், கரோனா தனிமை வார்டிலிருந்த பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவசரப் பிரிவில் அனுமதித்தனர்.

அப்போது, அறுவை சிகிச்சை மூலம் அப்பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இதையடுத்து, அவர் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டார்.

இதைத்தொடர்ந்து ஓரிரு நாள்களில் குழந்தைகளுக்கும் கரோனா பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறியும் சோதனையும் நடைபெறயிருக்கிறது.

இதையும் படிங்க:குழந்தைகளை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி?

Last Updated : May 27, 2020, 9:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details