கோவிட் 19 மேலாண்மைக்காக ஆயுர்வேதம் மற்றும் யோகாவை அடிப்படையாகக் கொண்ட தேசிய மருத்துவ நெறிமுறையை ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் முன்னிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி நேற்று (அக்.6) வெளியிட்டார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் இயக்குநர் டாக்டர் வி.எம்.கடோச் தலைமையிலான இடைநிலைக் குழு நிபுணர்களின் பரிந்துரையின்படி கரோனா தொற்று சிகிச்சைக்கு அளிக்கும் மருத்துவ மேலாண்மை நெறிமுறையில், ஆயுர்வேதா மற்றும் யோகா ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்காக இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆயுஷ் அமைச்சகம் தேசிய பணிக்குழுவை அமைத்து கரோனா சிகிச்சைக்கான தேசிய மருத்துவ மேலாண்மை நெறிமுறையை தயாரித்தது. 'கோவிட்-19 ஆயுர்வேத மருத்துவத்தின் பங்களிப்பை புரிந்துகொள்ள ஆயுஷ் அமைச்சகம் பல மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது' என்று ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் கூறியுள்ளார்.