ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்த முடசிர் யாகூப் என்பவர் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் திருமணம் செய்ய முன்மொழியப்பட்ட நாளில் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தார். அவரது திருமண தேதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாஜக தலைமையிலான அரசு சிறப்புச் சட்டம் 370 பிரிவை ரத்து செய்ததால், மார்ச் மாதத்திற்கு திருமணம் ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் மார்ச் மாதத்தில் கரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக மீண்டும் திருமண தேதி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த காலகட்டத்தில், மிகவும் மதிப்புமிக்க மற்றும் மகிழ்ச்சியான தருணத்திற்காக காத்திருந்து முடசீர்-க்கு வேதனையை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''எனது திருமணம் முதல் சென்ற ஆண்டு ஆகஸ்ட்டில் நிச்சயிக்கப்பட்டது. அந்த நேரத்தில் சிறப்புச் சட்ட நீக்கத்தால் திருமணம் நடத்த முடியவில்லை. பின்னர் மார்ச் மாதம் முடிவு செய்யப்பட்டபோது, கரோனாவால் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது'' என்றார்.
காஷ்மீரில் திருமணங்கள் மிகவும் ஆடம்பரமாகவும், கொண்டாட்டமாகவும் நடத்தப்படும். விருந்தினர் பட்டியல் வாரங்களுக்கு முன்பே தயாரிக்கப்பட்டு, வாஸ்வான் என்று அழைக்கப்படும் பல உணவு வகைகள் ஒரு பெரிய மண்டபத்தில் உண்ணுவதற்காக ஏற்பாடு செய்யப்படும்.
6 மாத குளிர் காலத்தைத் தொடர்ந்து வசந்த காலத்தில் காஷ்மீரில் திருமண சீசன் தொடங்கும். ஆனால் சிறப்புச் சட்டம் நீக்கத்தைத் தொடர்ந்து, கரோனா வைரஸ் பரவலால் திருமணங்கள் குறைந்துள்ளதாக தெரிகிறது.