நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 65 ஆயிரத்து 2 பேருக்கு கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அத்துடன் 996 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். இதையடுத்து, நாட்டின் மொத்த நோய்த் தொற்று எண்ணிக்கை 25 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதுவரை மொத்தம் 25 லட்சத்து 26 ஆயிரத்து 192 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 6 லட்சத்து 68 ஆயிரத்து 220 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில், இதுவரை 49 ஆயிரத்து 36 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.