கர்நாடக மாநில மாநிலங்களவை உறுப்பினரான அசோக் கஸ்திக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், பெங்களூரு பழைய விமான நிலைய சாலையிலுள்ள மணிபால் மருத்துவமனையில் செப்டம்பர் 2ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நோய்த்தொற்றின் பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், நேற்றிரவு (செப். 17) 10.31 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனை இயக்குநர் மணிஷ் ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'கரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட மாநிலங்களவை எம்.பி. அசோக் கஸ்தியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவக்குழுவினர் அவரை தொடர் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்தனர். இருப்பினும், அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்தார்.