தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்து-இஸ்லாமிய குடும்பங்களை உறவுகளாக மாற்றிய கோவிட்-19

ஜெய்ப்பூர்: கரோனா சிகிச்சை மையத்தில் இரண்டு பெண்களுக்கு ஏற்பட்ட நட்பினை ரக்ஷா பந்தன் தினத்தில் குடும்ப உறவாக மாற்றியுள்ளனர்.

covid-friendship-translates-into-precious-rakshabandhan-bond
covid-friendship-translates-into-precious-rakshabandhan-bond

By

Published : Aug 4, 2020, 1:57 PM IST

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வர்ஷா சவுகான் மற்றும் நிஷா ஷேக். இவர்கள் இருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரே சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது இருவருக்கும் ஏற்பட்ட நட்பு, இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் நாளன்று குடும்ப உறவாக மாறியுள்ளது. வர்ஷா மூன்று பெண் குழந்தைகளுக்குத் தாய், அவருக்கு ஆண் குழந்தைகள் இல்லை. அதேபோல், நிஷா ஷேக் இரண்டு ஆண் குழந்தைக்குத் தாய், அவருக்கு பெண் குழந்தைகள் இல்லை.

இந்நிலையில், வர்ஷா தனது மகள் ரோஷினியை நிஷாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவருடைய இரண்டு மகன்களுக்கும் திலகமிட்டு, ராக்கி கயிறை கட்டி இருவரையும் தனது சகோதரனாக ஏற்றுக்கொண்டார். பின்னர், சகோதரர்கள் இருவரும் ரோஷினிக்கு பரிசு ஒன்றை வழங்கினர்.

இந்து-இஸ்லாமிய குடும்பங்களை உறவுகளாக மாற்றிய கோவிட்-19

தங்கள் மகனுக்கு சகோதரிகள் கிடைத்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும், மத நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் இந்து - இஸ்லாமிய உறவுகளை உருவாக்கியுள்ளோம். இதுபோன்று நாட்டில் மத நல்லிணக்கம் வளரவேண்டும் என நம்பிக்கைத் தெரிவிப்பதாக நிஷா ஷேக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details