தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 8, 2020, 10:38 AM IST

Updated : Oct 8, 2020, 11:46 AM IST

ETV Bharat / bharat

பிகார் தேர்தல் : நட்சத்திர பிரச்சாரகர்களின் எண்ணிக்கையைக் குறைத்த தேர்தல் ஆணையம்

கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு, மக்கள் பெருமளவில் கூடுவதைத் தடுக்கும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநிலக் கட்சிகளுக்கான அதிகபட்ச நட்சத்திர பிரச்சாரகர்களின் எண்ணிக்கையை 40லிருந்து 30ஆக தேர்தல் ஆணையம் குறைத்து அறிவித்துள்ளது.

பிகார் தேர்தல்
பிகார் தேர்தல்

கரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல், வரும் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரங்கள் அம்மாநிலத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு மக்கள் பெருமளவில் கூடுவதைத் தடுக்கும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநிலக் கட்சிகளுக்கான அதிகபட்ச நட்சத்திர பிரச்சாரகர்களின் எண்ணிக்கையை 40லிருந்து 30ஆக தேர்தல் ஆணையம் குறைத்து அறிவித்துள்ளது.

அதேபோல், அங்கீகரிக்கப்படாத ஆனால் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்குக்கான நட்சத்திர பிரச்சாரகர்களின் எண்ணிக்கை 20 லிருந்து 15ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அனைத்து தேர்தல் அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நட்சத்திர பிரச்சாரகர்களின் பட்டியலை சமர்ப்பிக்கும் காலம் ஏழு ​​நாட்களில் இருந்து 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அம்மாநிலத்தில் நடைபெறும் தேர்தல் பணிகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையர் மற்றும் அவரது குழுவினர் பிகார் சென்ற நிலையில், கரோனா சூழலுக்கு மத்தியில், நட்சத்திர பிரச்சாரகர்களால் ஏற்படக்கூடிய மக்கள் கூட்டம் குறித்து தங்களிடம் அச்சம் தெரிவிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் இது குறித்து தெரிவித்துள்ளது.

Last Updated : Oct 8, 2020, 11:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details