தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19 தொற்று குறித்து வதந்தி பரப்பிய பெண் கைது! - கோவிட்19 தொற்றுநோய்

புவனேஸ்வர்: கோவிட்-19 வைரஸ் தொற்று குறித்து வதந்தி பரப்பிய பெண்ணை காவலர்கள் கைது செய்தனர்.

COVID-19  coronavirus  rumours  fake news  கோவிட்19 தொற்றுநோய் குறித்து வதந்தி பரப்பிய பெண் கைது!  கோவிட்19 தொற்றுநோய்  வதந்தி பரப்பிய பெண் கைது
COVID-19 coronavirus rumours fake news கோவிட்19 தொற்றுநோய் குறித்து வதந்தி பரப்பிய பெண் கைது! கோவிட்19 தொற்றுநோய் வதந்தி பரப்பிய பெண் கைது

By

Published : Apr 3, 2020, 7:29 AM IST

ஒடிசாவில் கோவிட்-19 தொற்று குறித்து வதந்தி பரப்பினால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு ஏற்கனவே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் பத்ராக் பகுதியில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது மல்கோடவுன் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு செய்தித் தொடர்பாளர் பாகி கூறுகையில், “போலி செய்திகளை பரப்புவதில் ஈடுபட்டுள்ளவர்கள் தேச விரோதிகள்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில் கரோனா வைரஸ் குறித்து புகாரளிக்க மக்கள் அஞ்சினால் அது பரவி சமூகத்தை அழித்து சேதத்தை ஏற்படுத்தி விடும்” என்றார்.

ஒடிசாவில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 197 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தில் இதுவரை மொத்தம் 88 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: கோவிட்19 வைரஸ் தொற்றுக்கு எதிர்கொள்ளும் அரசின் அவசரக்கால திட்டம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details