தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா தொற்று - முகக்கவசம் பயன்படுத்துவது குறித்து உலக சுகாதார மையம்! - முகக் கவசம்

மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், முகக்கவசம் பயன்படுத்துவது குறித்து உலக சுகாதார மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்று - முகக்கவசம் பயன்படுத்துவது குறித்து உலக சுகாதார மையம்!
கரோனா தொற்று - முகக்கவசம் பயன்படுத்துவது குறித்து உலக சுகாதார மையம்!

By

Published : Mar 30, 2020, 8:22 PM IST

கரோனா தொற்று தீவிரமடைந்தபின் உலகம் முழுவதும் மருந்துகள், மருத்துவ உபகரணங்களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக முகக்கவசம், இதற்கு உலகெங்கிலும் தட்டுப்பாடு நிலவுகிறது. சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முகக்கவசம் தேவைப்படும் பணியாளர்களுக்கே முகக்கவசம் சரிவர கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று ஏற்படும்.

இப்படியான சூழலில், முகக்கவசத்தின் பயன்பாடு குறித்து உலக சுகாதார மையம் வழங்கியுள்ள பரிந்துரைகள்:

கரோனா தொற்று - முகக்கவசம் பயன்படுத்துவது குறித்து உலக சுகாதார மையம்!

கரோனா தொற்றால் பாதிப்படைந்த நபர்கள் உங்கள் பராமரிப்பில் இருந்தால்

உங்களுக்கு இருமல், தும்மல் இருந்தால்

சுவாசக் கோளாறுள்ள நோயாளிகளை கவனிக்கும் சுகாதாரப் பணியாளர்களாக நீங்கள் இருந்தால் முகக்கவசம் அணிவது அவசியம்.

முகக்கவசத்தை பயன்படுத்தும்போது மனதில் கொள்ள வேண்டியவை:

கரோனா தொற்று - முகக்கவசம் பயன்படுத்துவது குறித்து உலக சுகாதார மையம்!

முகக்கவசத்தை அணியும் முன் கைகளை சோப்பு மற்றும் நீர் கொண்டு கழுவ வேண்டும் அல்லது ஆல்கஹால் தன்மையுடைய சானிடைசரை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.

வாய், மூக்கு, கன்னப் பகுதிகளை சரியாக மறைக்கும்படி முகக்கவசத்தை அணிதல் வேண்டும்.

அறுவை சிகிச்சைகான முகக்கவசத்தை நீங்கள் பயன்படுத்தினால், அதன் மடிப்புகளை விரித்து கீழ்நோக்கி இருக்கும்படி அணிய வேண்டும்.

டிஸ்போசபல் (மறுமுறை பயன்படுத்த முடியாத) முகக்கவசங்களை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.

முகக்கவசம் ஈரமாக ஆரம்பித்ததும், உடனடியாக அகற்றிவிட வேண்டும்.

முகக்கவசத்தை பயன்படுத்தும்போது தொடக்கூடாது, அப்படி தொட்டால், உடனடியாக கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

முகக்கசவத்தை அகற்றும்போது அசுத்தமான பகுதிகளை தொடாமல் அகற்ற வேண்டும்.

முகக்கவசத்தை கழுத்தில் தொங்கவிடக் கூடாது.

முகக்கவசத்தை அகற்றி கண்ட இடங்களில் அலட்சியமாக வைக்காமல், குப்பைத் தொட்டியில் போட வேண்டும். பின்பு கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

முகக்கவசங்களை தவறாக பயன்படுத்த வேண்டாம். அதை அணிவது ட்ரெண்ட் அல்ல, உங்களையும் சுற்றத்தாரையும் பாதுகாக்கும் நடவடிக்கை. தேவையில்லாமல் அதிக முகக்கவசங்களை வாங்க வேண்டாம், அது மக்களை பாதுகாக்கும் பணியில் தன்னலமற்று செயல்படும் சுகாதாரப் பணியாளர்களுக்கு அதிகம் தேவைப்படும்.

தனிமைப்படுத்துதலை பின்பற்றுங்கள், கைகளை தொடர்ச்சியாக தூய்மைப்படுத்துங்கள், தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. #IndiaFightsCorona

ABOUT THE AUTHOR

...view details