கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபரின் உடலில் உள்ள கரோனா வைரஸ் எத்தனை மணி நேரம் உயிருடன் இருக்கும் என மருத்துவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஆக்ஸ்போர்டு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவரான பிரபல தடயவியல் நிபுணர் தினேஷ் ராவ், தனது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த 62 வயது நபரின் உடலை வைத்து இந்த ஆய்வை மேற்கொண்டார்.