கேள்வி: லாக்டவுனிலிருந்து நாடு படிப்படியாக விடுவிக்கப்படும் நிலையில், தற்போது கரோனா பரவலை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும். பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க வேண்டிய சூழிலில் வைரஸ் பரவலை தடுப்பது எப்படி?
இந்த விவகாரத்தில் நாம் இரு கோணத்தில் பார்க்கப்படவேண்டும். லாக்டவுன் அறிவித்த நிலையிலும் இந்தியாவில் கரோனா பரவல் என்பது சீராக அதிகரித்துள்ளது. 20 நாட்களில் நோய் பரவல் 20 மடங்கு அதிகரித்துள்ளது. இந்திய பொருளாதாரம் லாக்டவுன் காரணமாக பாதிப்பிற்குள்ளான நிலையில், வைரஸ் பாதிப்பையும் நாம் புறக்கணிக்கப்பட முடியாது.
இந்தச் சூழலில் உரிய தனிநபர் இடைவெளி, முகக் கவசம் ஆகியவற்றின் மூலம் நாம் மெல்ல அன்றாட நடவடிக்கைகளைத் தொடங்கலாம். ஏப்ரல் 15ஆம் தேதி முதல் கட்ட லாக்டவுனுக்குப் பின்னரே இதை கடைபிடிக்கும் முயற்சியில் களமிறங்கி இருக்கலாம். ஆனால் மேலும் இரு முறை லாக்டவுனை நீட்டித்தது. இந்த லாக்டவுன் நீட்டிப்பில் எனக்கு உடன்பாடு இல்லை. மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நாள்பட்ட நோயளிகள், முதியவர்களை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வைத்திருப்பது நலம்.
கேள்வி: பொதுப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் நிலையில், உரிய தனிநபர் இடைவெளியை பொதுப்போக்குவரத்தில் கடைபிடிக்க முடியுமா?
பொது வெளியில் மக்கள் கூடுவதற்கான சூழல் நிகழும் போது மக்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது சற்று சிரமம்தான். அதேவேளை, அனைவரும் முகக் கவசம் அணிவதன் மூலம் நோய் பரவலை வெகுவாக தடுக்கலாம். அன்றாட நடடிக்கைகளை மீண்டும் தொடங்க முகக் கவசம் அனிவதே எளிய வழியாகும். அத்துடன், பெருந்தொற்று நீங்கும் வரை தேவையற்ற பொது நிகழ்வுகளில் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும்.
கேள்வி:தமிழ்நாட்டில் தற்போது வெய்யிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், கரோனா வைரஸ் பரவலை தட்பவெட்ப சூழல் பாதிக்குமா?
வெளியே தட்பவெட்பம் எப்படி இருந்தாலும், மனிதனின் உடலின் சராசரி தட்பவெட்ப நிலை 37 டிகிரியாகத்தான் இருக்கும். வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் சளி, உமிழ்நீர் மூலம் பரவும் என்பதால், வெய்யில் காலத்தின்போது அவை பொருட்களின் மேற்பரப்பில் நீண்ட நேரம் ஈரத்தன்மையுடன் இருக்காது. இதன் காரணமாக, நோய் தொற்று பரவுதல் கொஞ்சம் கட்டுக்குள் வரலாம்.