லண்டனிலிருந்து லக்னோவுக்கு திரும்பிய பிரபல பின்னணி பாடகி கனிகா கபூர், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளாமல் பல விழாக்களில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்யந்த் சிங் கலந்துகொண்ட விழாவில் கனிகா கபூர் பங்கேற்றார்.
இதையடுத்து, கோவிட் 19 நோயால் துஷ்யந்த் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதனிடையே, அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டார். துஷ்யந்துடன் இருந்த வீடியோவை வருண் காந்தி ஒரு சில நாள்களுக்கு முன்பு பகிர்ந்திருந்தார். இதனால், அவருக்கும் கோவிட் 19 பெருந்தொற்று இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.