காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் தங்களது வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை கடற்கரையோரத்தில் வைப்பதற்கும், அவற்றை பழுதுபார்க்கவும் தங்களுக்கு பணிமனை கட்டடம் ஒன்று கட்டித்தர வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், பட்டினச்சேரி, காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, மண்டபத்தூர் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் மீனவர்களுக்கான பணிமனைகள் புதுச்சேரி அரசால் உலக வங்கி நிதியுதவியுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இவற்றை இன்று (அக்.23) மாலை, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்து, மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.