தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா தடையை மீறி கோயிலில் திரண்டவர்கள் மீது வழக்குப்பதிவு - காவல்துறை வழக்கு கரோனா பாதிப்பு

திருவனந்தபுரம்: கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் காணப்படும் கேரளாவில் தடை உத்தரவை மீறி திரண்டதால் 12 பேர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

corona
corona

By

Published : Mar 22, 2020, 10:54 AM IST

Updated : Mar 22, 2020, 11:00 AM IST

கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் 315ஐ தாண்டியுள்ளது. கரோனா பாதிப்பு மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் அதிகம் கானப்படும் நிலையில், கேரளாவில் மட்டும் இதுவரை 52 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அங்கு நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்த பல பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொது இடங்களில் 15 பேருக்கு மேல் கூடுவதைத் தடுக்க காவல் துறையினர் தீவிரமாகக் கண்காணிப்பு மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலையின்கீழு என்ற பகுதியில் உள்ள கோயிலில் நடைபெற்ற விழா ஒன்றில் சுமார் 500 பேர் ஒன்றாகத் திரண்டுள்ளனர். தகவலறிந்த காவல் துறையினர் அப்பகுதிக்கு விரைந்துச் சென்று கோயில் நிர்வாகத்தினரிடம் விளக்கம் கேட்டனர்.

அதன்பின்னர், கோயில் நிர்வாகத்தினர், விழா ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 12 பேர் மீது விதிமுறைகளை மீறியதாகக் கூறி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கேரளாவில் கரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அம்மாநில அரசு இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு நிதியை ஒதுக்கியுள்ளது.

இதையும் படிங்க:கரோனா: 4,800 உயிர் பலிக்கு இத்தாலியின் இந்தப் பொறுப்பற்ற செயல்தான் காரணமா?

Last Updated : Mar 22, 2020, 11:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details