தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19: தெலங்கானாவில் மே-7ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு - kcr to extend lockdown till may 7 in telangana

கரோனா நோய்க் கிருமியின் தொற்றின் மூலம் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ஊரடங்கை மே 7ஆம் தேதி வரை நீட்டிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையம், வீடுகளில் டெலிவரி செய்யும் பொருட்கள் போன்றவற்றிற்கு தடை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ்
தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ்

By

Published : Apr 20, 2020, 1:02 AM IST

ஹைதராபாத் (தெலங்கானா): தெலங்கானா மாநில முதலமைச்சர் ஊரடங்கை மே 7ஆம் தேதி வரை நீட்டிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு, அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிட்-19 நோய் அறிகுறியை தெரிந்துகொள்வதற்கான கால அளவை நீட்டிக்கவே, இந்தத் திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வீடுகளுக்கு கொண்டு சென்று பொருட்களை டெலிவரி செய்வதையும் முற்றிலுமாக மே 7ஆம் தேதி வரை தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் வாடகை வீட்டில் குடியிருப்போரிடம், வீட்டின் உரிமையாளர்கள் மார்ச் முதல் மூன்று மாதத்திற்கு வாடகை வசூல் செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details