தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் ஒரு லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு! - கரோனா வைரஸ் டெல்லி பாதிப்பு

டெல்லியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று (ஜூலை 6) ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

COVID-19 tally crosses Lakh mark in Delhi
COVID-19 tally crosses Lakh mark in Delhi

By

Published : Jul 7, 2020, 3:08 AM IST

நாட்டில் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா, தமிழ்நாட்டை அடுத்து தலைநகர் டெல்லி மூன்றாம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், டெல்லி சுகாதார துறை நேற்று மாலை வெளியிட்ட தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் புதிதாக 1,379 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை ஒரு லட்சத்து 823 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம் இப்பெருந்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 48 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து, டெல்லியில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 115 ஆக உள்ளது.

மேலும் இத்தொற்றிலிருந்து இதுவரை 72 ஆயிரத்து 88 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 25 ஆயிரத்து 620 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் இதுவரை ஆறு லட்சத்து 57 ஆயிரத்து 383 கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: தனியார்மயமாக்கலை நோக்கி செல்லும் ரயில்வேதுறை!

ABOUT THE AUTHOR

...view details