"கரோனா தொற்றால் இறந்தவரின் உடலிலிருந்து வைரசின் (தீநுண்மி) வீரியம் படிப்படியாகக் குறைந்துவருகிறது. ஆனால் நோய்த்தொற்று உடலிலிருந்து முழுமையாக விலகிவிட்டதை உறுதிசெய்ய சரியான காலக்கெடு இன்னும் முடிவாகவில்லை" என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
இறந்தவர் உடலில் கரோனா நோய்த்தொற்று எத்தனை நாள்கள் இருக்கும் என்ற கேள்விக்கு இந்தப் பதிலை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றால் இறந்தவரின் உடலைக் கையாளும்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடல்கூறு ஆய்வின்போதும் மருத்துவர்கள் தக்க பாதுகாப்புடன் இருக்கும்படி ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல், கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றால் இறந்தவரின் உடலையும், கரோனா தொற்று அல்லாத உடலையும் ஒரே இடத்தில் வைத்தால் ஏதேனும் தொற்று பாதிப்பு ஏற்படுமா என்று ஐசிஎம்ஆரிடம் கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த ஐசிஎம்ஆர், ”சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்பட்டால் தொற்று பரவும் வாய்ப்பு மிகவும் குறைவு” என்றது.
இதையும் படிங்க:கரோனாவிற்கு மருந்தாக கங்கை நீர் தீர்வாகுமா - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சொல்வது என்ன?