தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சீனாவிலிருந்து மருந்துப் பொருள்களை கொண்டு வரும் ஸ்பைஸ் ஜெட்

புதுடெல்லி: ஷாங்காயிலிருந்து மருந்துப் பொருள்களை கொண்டு வருவதற்காக ஸ்பைஸ் ஜெட் தனது சரக்கு விமானத்தை சீனாவிற்கு அனுப்பியுள்ளது.

COVID-19
COVID-19

By

Published : Apr 16, 2020, 9:44 AM IST

சீனாவில் தற்போது கரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்குள் உள்ளது. வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் மற்ற நாடுகளுக்கு உதவி செய்வோம் என சீனா அறிவித்திருந்தது.

முன்னதாக ஷாங்காய், ஹாங்காங் நகரங்களிலிருந்து மருந்துப் பொருள்களை ஏற்றி வரும் வகையில் சரக்கு விமானங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என சீனாவிற்கு இந்தியா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஷாங்காயிலிருந்து மருத்துப் பொருள்களை ஹைதராபாத்திற்கு கொண்டு வர தனது சரக்கு விமானத்தை ஸ்பைஸ் ஜெட் விமானம் அனுப்பியுள்ளது.

கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து இன்று காலை 8.25 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் ஷாங்காயில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தரையிரங்கியது.

பின்னர் ஷாங்காயிலிருந்து புறப்படும் இந்த விமானமானது இரவு 11.10 மணியளவில் ஹைதராபாத்திற்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக சீனாவுக்கு சரக்கு விமானம் இயக்கப்படுவதாக ஸ்பைஸ் ஜெட் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:கரோனா - இந்தியாவுக்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்த சுந்தர் பிச்சை!

ABOUT THE AUTHOR

...view details