தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மருத்துவ உபகரணங்களுடன் டெல்லி வந்தடைந்த ஸ்பைஸ் ஜெட் விமானம்! - ஸ்பைஸ் ஜெட் விமானம்

டெல்லி: சுமார் 18 டன் எடை அளவுள்ள கரோனா மருத்துவ உபகரணங்களுடன் ஸ்பைஸ் ஜெட் விமானம் கடந்த வெள்ளி-சனி நள்ளிரவில் டெல்லி வந்தடைந்தது.

COVID-19  SpiceJet  Medical supplies from China  Civil Aviation Ministry  விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம்  ஸ்பைஸ் ஜெட் விமானம்  ஷாங்காய்
மருத்துவ உபகரணங்களுடன் டெல்லி வந்தடைந்த ஸ்பைஸ் ஜெட்

By

Published : Apr 26, 2020, 2:42 PM IST

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து சுமார் 18 டன் எடையுள்ள மருத்துவ உபகரணங்களை ஏற்றிக்கொண்டு வெள்ளி-சனி இரவு டெல்லி வந்தடைந்தது. இந்தியாவில் பயணிகள் விமானத்தை சரக்கு விமானமாகப் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

"பைஸ்ஜெட் விமானம் எஸ்.ஜி. 7017 சுமார் 18 டன் எடையுள்ள மருத்துவ உபகரணங்களை சீனாவிலிருந்து எடுத்துவந்துள்ளது. நாட்டிற்குத் தேவைப்படும் மருந்துப் பொருள்களைக் கொண்டுவரும் சேவையில் எங்கள் விமானம் ஈடுபட்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது" என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்பைஸ் ஜெட் விமானத்திலிருந்து மருத்துவ உபகரணங்களை இறக்கும் ஊழியர்கள்

லைஃப் லைன் உதான் திட்டத்தின்கீழ் 649 டன் எடையுள்ள மருத்துவ உபகரணங்கள் இதுவரை 368 விமானங்களின் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது என விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:ரேபிட் டெஸ்ட் சோதனை தற்போதைக்கு வேண்டாம்: அதன் துல்லியத்தை ஐ.சி.எம்.ஆர் ஆராய்கிறது!

ABOUT THE AUTHOR

...view details