தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியின் நிலைமை திருப்திகரமாக உள்ளது - சுகாதாரத் துறை அமைச்சர் தகவல் - கரோனா டெல்லி

டெல்லியின் நிலைமை திருப்திகரமாக உள்ளது என தெரிவித்த சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இன்னும் நடவடிக்கைகள் தேவை என கூறியுள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர்
சுகாதாரத்துறை அமைச்சர்

By

Published : Jul 27, 2020, 6:13 AM IST

கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் இதுவரை ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 389 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 931 பேர் குணமடைந்துவிட்டதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், நிலைமை திருப்திகரமாக உள்ளது என டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "டெல்லியில் பாதிக்கப்பட்டோரின் விகிதம் 5 விழுக்காடாக உள்ளது. நிலைமை திருப்திகரமாக உள்ளது. மேலும், சில ஏற்பாடுகள் செய்ய வேண்டும். எதிர்காலத்திற்காக தயாராகிவருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்ட இளநிலை மருத்துவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details