தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பொறுப்புடன் பதிலளித்த ஹர்ஷ் வர்தன், பாராட்டிய சசி தரூர் - ஹர்ஷ் வர்தன் சசி தரூர்

கரோனா தொற்றால் நாடு முழுவதும் ஸ்தம்பித்துள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனும் சக சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்களும் சிறப்பாக பணியாற்றி வருவதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர் பாராட்டியுள்ளார்.

சசி தரூர்
சசி தரூர்

By

Published : Apr 17, 2020, 8:21 PM IST

திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சசிதரூர், கரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளின் பட்டியலில் அம்மாநிலம் இடம்பெற்றது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் ட்விட்டரில் முன்னதாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.

”கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவக்கைகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் நிலையில், திருவனந்தபுரம் இந்தப் பட்டியலில் ஏன் இடம் பெற்றது” என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையைக் குறிப்பிட்டு ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்த ஹர்ஷ் வர்தன், இந்தியாவில் மொத்தம் 170 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் எனப்படும் தீவிரத் தொற்றுள்ள மாவட்டங்களாகவும் 207 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் அல்லாத, தொற்றுப் பரவாத மாவட்டங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஹர்ஷ் வர்தனின் இந்த பதிலைத் தொடர்ந்து “பதிலளித்ததற்கு நன்றி. நீங்களும் உங்கள் சக பணியாளர்களும் சிறப்பாக செயல்படுகிறீர்கள். கேரள அரசு வைரஸ் தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களின் பட்டியலிலேயே திருவனந்தபுரத்தை வகைப்படுத்தி உள்ளது. மத்திய அரசின் ஹாட்ஸ்பாட் பட்டியலிலும் திருவனந்தபுரம் நீண்ட காலம் நீடிக்காது என நினைக்கிறேன்” எனவும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கோவிட்-19 பரவல் குறித்து விவாதிக்க அமைச்சரவைக் கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details