தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கொரோனா பீதி: காஷ்மீரின் லே மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை - லே பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை

கொரோனா பீதியின் காரணமாக காஷ்மீர் மாநிலம் லே மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Covid-19
Covid-19

By

Published : Mar 9, 2020, 9:44 AM IST

உலகம் முழுவதும் தற்போது பேசுபொருளாகியிருப்பது 'கொரோனா' என்னும் கொலைகார வைரஸ்தான். சீனாவிலிருந்து தொடங்கி, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மிக வேகமாகப் பரவிவருகிறது இந்தக் கொடூர கொரோனா.

கொரோனாவிற்கு சீனாவில் இதுவரை மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வராமல் இருக்க முழு எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இருப்பினும், தற்போது வரை இந்தியாவில் 39 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே, கொரோனா ஏற்படுத்திய பீதியின் காரணமாக காஷ்மீர் மாநிலம் லே மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் வரை 31ஆம் தேதி வரை விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:கொரோனா: தங்களைக் காக்க வலியுறுத்தி வாட்ஸ்அப் காணொலி வெளியிட்ட மீனவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details