2020-21ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 1,066 கோடியை இந்திய ரயில்வே தங்கள் பயணிகளுக்கு திரும்பச் செலுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சந்திர சேகர் கவுர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இவ்விவரங்களை பெற்றுள்ளார்.
இந்திய ரயில்வே வரலாறு காணாத சரிவு - 167 ஆண்டுகளில் இதுவே முதல்முறை? - தனியார்மயம்
டெல்லி: 167 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்திய ரயில்வே சரிவை சந்தித்துள்ளது. பயணச்சீட்டுக்கான பதிவு கட்டண வருவாயை விட பயணிகளுக்கு திரும்ப செலுத்தப்பட்ட கட்டணம் அதிகமாக உள்ளது.

அதன்படி இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், கரோனா தொற்று காரணமாக ரயில் சேவைகள் முடக்கப்பட்டது பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் மாதம் ரூ. - 531.12 கோடி, மே மாதம் ரூ. - 145.24 கோடி, ஜூன் மாதம் ரூ. - 390 கோடி என இத்தனை கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பயணச் சீட்டை ரத்து செய்தவர்களின் பணத்தை திரும்ப அளித்ததே இந்த இழப்புக்குக் காரணம் என இந்திய ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர் டிஜே நரேன் தெரிவித்துள்ளார்.
2019-20ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், இவை ஏப்ரல் மாதம் ரூ. 4,345 கோடி, மே மாதம் ரூ. 4,463 கோடி, ஜூன் மாதம் ரூ. 4,589 கோடி வருவாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.