இந்தியாவில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விழுக்காடு உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாட்டில் தற்போதைய நிலவரப்படி நான்கு லட்சத்து ஒன்பதாயிரத்து 82 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 856 பேர் குணமடைந்தது நம்பிக்கை அளிக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 60.77 விழுக்காடாக உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விவரம்
- சண்டிகர் - 85.9 விழுக்காடு
- லடாக் - 82.2 விழுக்காடு
- உத்தரகாண்ட் - 80.9 விழுக்காடு
- சட்டீஷ்கர் - 80.6 விழுக்காடு
- ராஜஸ்தான் - 80.1 விழுக்காடு
- மிசோரம் - 79.3 விழுக்காடு
- திரிபுரா 77.7 விழுக்காடு
- மத்திய பிரேதசம் - 76.9 விழுக்காடு
- ஜார்கண்ட் - 74.3 விழுக்காடு
- பிகார் - 74.2 விழுக்காடு
- ஹரியாணா - 74.1 விழுக்காடு
- குஜராத் - 71.9 விழுக்காடு
- பஞ்சாப் - 71.9 விழுக்காடு
- டெல்லி - 70.2 விழுக்காடு
- மேகாலயா - 69.4 விழுக்காடு
- ஒடிஷா -69.0 விழுக்காடு
- உத்தரப் பிரதேசம் - 68.4 விழுக்காடு
- ஹிமாச்சல பிரதேசம் - 67.3 விழுக்காடு
- மேற்கு வங்கம் - 66.7 விழுக்காடு
- அசாம் - 62.4 விழுக்காடு
- ஜம்மு காஷ்மீர் - 62.4 விழுக்காடு